வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவினால் உணவக உரிமையாளர்கள் அச்சம்

நிபந்தனையுடன் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை (சிஎம்சிஒ) அமலிருக்கும் மாநிலங்களில் உள்ள தனியார் மற்றும் அரசாங் கத்துறை ஊழியர்கள் வீட்டி லிருந்து வேலை செய்ய வேண் டும் என்று அரசாங்கம் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவினால் ஏற்படப் போகும் பாதிப்புகளையும் தாக்கத்தையும் சமாளிப்பதற்கு உணவு மையங்களின் உரிமையாளர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று மலேசியா கினி கூறியது. தேசிய பாதுகாப்பு மன்றத்தின் புதிய உத்தரவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை என்று மலேசியா-சிங்கப்பூர் காப்பிக் கடைகளின் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் ஹோ சூ மோங் கூறினார்.
குறிப்பாக மதிய உணவு நேரத்தில் வருகை புரியும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் அந்த உத்தரவு குறைத்துவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த உத்தரவினால் குறை வான வாடிக்கையாளர்களே உறுப்பினர்களின் உணவகங் களுக்கு வருகை புரிவார்கள். அல்லது சில சமயங்களில் வாடிக்கையாளர்களே இல்லா மல் போகலாம்.
எந்த அளவுக்கு உணவு களையும் குடிபானங்களையும் தயார் செய்ய வேண்டும் என்பதும் உறுப்பினர்களால் கணிக்க முடியாமல் போகலாம். தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களைத் தயார் செய்தால் சங்க உறுப்பினர்கள் தான் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஹோ சூ மோங் மேலும் கூறினார.
இது போன்ற காரியங்களில் சங்க உறுப்பினர்கள் இனிமேல் ஈடுபடுவது மிகவும் கடினம் ஏனெனில் கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைகளால் (எம்சிஒ) சங்க அங்கத்தினர்கள் பல இன்னலுக்கு ஆளானார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ரா ஜெயா மற்றும் சபாவில் அமலில் இருக்கும் நிபுந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையைப் (சிஎம்சிஒ) பற்றியும் ஹோ சூ மோங் கருத்துரைத்தார். சிஎம்சிஒ அமலாக்கத்தினால் உணவகங்களுக்கு வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை மிகவும் மோசமாக குறையாது என்று தாம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
உறுப்பினர்களின் உணவகங் களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருகை புரிவார்கள் என்று சங்கம் நம்புகிறது. எனினும் கடந்த இரு தினங் களாக குறைவான வாடிக்கையாளர்களே உறுப்பினர்களின் உணவகங் களுக்கு வருகை புரிந்தனர் என்று அவர் குறிப் பிட்டார்.
இதற்கிடையே, 20லிருந்து 30 சதவீத சங்க உறுப்பினர்கள் இக்காலக் கட்டத்தில் தங்களின் உணவகங்களைத் திறக்காமல் இருப்பதற்கான முடிவை எடுத்திருக்கின்றனர் என்று தாம் நம்புவதாக ஹோ சூ மோங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =