வீடு புகுந்து கொள்ளை -கேங் லீ கும்பல் பிடிபட்டது

0

கடந்த ஒரு மாத காலமாக தெமெர்லோ- குவாந்தான் மாவட்ட குடியிருப்புப் பகுதிகளில் விடியற்காலை ஆயுதமேந்தி வீடு புகுந்து வீட்டின் உரிமையாளர்களை மிரட்டி கொள்ளையிட்டு வந்த கேங் லீ கும்பல் குவாந்தான் டி9 சிறப்பு பிரிவினரால் பிடிபட்டது.
தெமெர்லோ தீவிர குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஒரு மலாய்க்காரர், 3 இந்தோனேசிய ஆடவர்களையும் கைது செய்து அவர்கள் கொள்ளையிட்ட தங்கச்சங்கிலி- விலைஉயர்ந்த கைக்கடிகாரங்களையும் கைப்பற்றினர்.
மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையில் 2 கிலோ ஹெரோயின், 600 கிராம் சாபு, 284 மெத்தாபெத்தமின் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த போதைப்பொருளின் மதிப்பு 145,000 வெள்ளியாகும். இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 30 வயது முதல் 47 வயதுக்குட்பட்ட 4 ஆடவர்களையும் மேல்விசாரணைக்காக போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பகாங் காவல் துறை துணைத்தலைவர் டத்தோ யுஸ்ரி ஹசான் பஸ்ரி நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அவருடன் இந்தக் கூட்டத்தில் மாநில குற்றப்புலனாய்வு துறை துணைத்தலைவர் டத்தோ ஒஸ்மான் நாயன், தெமெர்லோ ஓசிபிடி யுஸ்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here