வீடுகள் விவகாரத்தில் நஜிப்பின் கூற்று உண்மைக்கு மாறானது!

0
KUALA LUMPUR, 18 April — Bekas Perdana Menteri Datuk Seri Najib Tun Razak tiba di Kompleks Mahkamah Kuala Lumpur hari ini pada perbicaraan berhubung kes penyelewengan dana SRC International Sdn Bhd yang dihadapinya. Najib berhadapan kes melibatkan tujuh pertuduhan melibatkan RM42 juta dana SRC International Sdn Bhd. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA

விற்கப்படாமல் இருக்கும் விலையுயர்ந்த வீடுகளை வெளிநாட்டினருக்கு விற்பதில் சலுகை காட்டப்படுவதைக் குறைகூறியிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் கா வோ குறிப்பிட்டுள்ளார்.கட்டி முடிக்கப்பட்ட ஒரு மில்லியன் விலையுள்ள வீடுகளை 600,000 ரிங்கிட்டுக்குக் குறைத்து விற்கப்படுவது யாரையோ திருப்திப் படுத்துவதாக இருப்பதாகவும், அதன் மூலம் 50,000 வெளிநாட்டினர் நாட்டில் வசிக்க வழி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு குடும்பத்தில் 5 பேர் வீதம் கணக்கிட்டால், 2 லட்சத்து 50ஆயிரம் பேர் வரை மலேசியாவில் வசிக்கும் நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டில் 820 கோடி ரிங்கிட் மதிப்பிலான கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை விற்கும் ஒரு முயற்சியாக, ஒரு மில்லியன் விலையிலான வீடுகளை 6 லட்சம் விலையில் விற்க 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நஜிப்பின் குறைகூறலுக்குப் பதிலளித்த வோங் கா வோ, பக்காத்தான் அரசு ஏழை எளிய மக்களின் நலனை புறக்கணிக்கும் தொனியில் நஜிப் கூறியிருப்பததோடு, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ இஸ்மாயில் சப்ரியும் அது பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். குறை கூறுவதன் மூலம் எதிர்க்கட்சியினரின் தரம் தாழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேம்பாட்டாளர்களின் நிதி சுழற்சியை சரி செய்து அவர்களுக்கு உதவும் நோக்கத்தில்தான் அத்திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், அது நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்தே வரையப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துத் தரப்பாரும் பயனடையவே அரசு திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், அதில் வீட்டு உரிமை கொள்ளும் திட்டமும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார். முதன் முறையாக வீடு வாங்குவோருக்கு வீட்டின் விலையை 10 விழுக்காடு வரை குறைத்தும் ஒரு மில்லியனிலிருந்து இரண்டரை மில்லியன் ரிங்கிட் வரையிலான வீடுகளுக்கான முத்திரை வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்கண்ட திட்டத்தின் மூலம், 1,300 கோடி ரிங்கிட் பெறுமான 20,000 வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும், நஜிப்பின் கூற்றின்படி 100,000 மலேசியர்கள் அதன் மூலம் பயனடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முந்தைய ஆட்சியின் போது, 2012ஆம் ஆண்டில் பிரிமா திட்டத்தின் வழி அளவுக்கதிகமான வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் இருந்ததற்கு நஜிப் பதில் ஏதும் சொல்லவில்லையே, அது ஏன் என வோங் கா வோ வினா எழுப்பினார்.
தற்போது அந்த பிரிமா வீடுகளை விற்றுத் தீர்க்க 30 விழுக்காடு வரை விலை குறைக்கப் பட்டிருப்பது நஜிப்புக்குத் தெரியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே, நஜிப் தமது அரசியல் வாழ்வுக்காகக் கேள்வி எழுப்புவதை விடுத்து, மக்கள் நலனை முன்னிட்டு கேள்வி எழுப்ப வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 18 =