விவாதம் செய்யவே நாடாளுமன்றம் அமைச்சர்
சொற்பொழிவை நிகழ்த்தும் இடமில்லை!

நாடாளுமன்றம் என்பது விவாதத்திற்கான இடமே தவிர அமைச்சரின் சொற்பொழிவைக் கேட்பதற்கானது அல்ல என்று போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
நேற்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், 2021 வரவு -செலவுத் திட்டம் குறித்த கேள்வி பதில் அமர்வுக்கான கால அவகாசம் 20 நிமிடங்கள் மட்டுமே வரையறுத்துள்ளது பற்றி நேற்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொர் அமைச்சருக்கும், அந்தந்த அமைச்சுகளுக்குக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க 20 நிமிடங்கள் மட்டுமே உள்ளன என்று மக்களவை சபாநாயகர் டத்தோ அஸ்ஹார் அஸிசான் ஹருண் தெரிவித்ததைத் தொடர்ந்து டத்தோ அன்வார் இவ்வாறு கேள்வி எழுப்பினார்
இந்த அவையில் அமைச்சர் ஒரு விளக்கம் அளித்தார். அதற்கு நன்றி. ஆனால் இது அமைச்சரின் சொற்பொழிவைக் கேட்பதற்கான இடம் அல்ல இந்த நாடாளுமன்றம். இது விவாதத்திற்குரிய இடம்.
நாம் அனைத்து எம்.பி.க்களையும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்றால் அவரின் வாதச் சுருக்கத்தை 20 நிமிடங்கள் கேட்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.
நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பி அதை , விவாதிக்கவும் குறுகீடு செய்ய அந்த 20 நிமிடம் போதாது .
மேலும், 80க்கும் அதிகமான எம்.பி.க்கள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். அதோடு விவாதத்திற்கான நேரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டத்தோஸ்ரீ அன்வரை ஆதரித்ததோடு, நாடாளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யவும் அஸ்ஹார் வலியுறுத்தினர்.
மீண்டும் கட்சித் தலைவர்களை அழைத்து, இந்த விவகாரம் குறித்து விரைவில் விவாதிப்பதாக சபாநாயகர் டத்தோ அஸ்ஹார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here