விவசாயத்துறையில் வெற்றிநடை போடும் இளம் விவசாயி கார்த்திக்

“தன் கையே தனக்கு உதவி” என்பதற்கேற்ப தனது சுய முயற்சியின் காரணமாக விவசாயத்துறையில் வெற்றி அடைந்துள்ளார் கெடா பீடோங் ரிவர்சைட் தோட்ட மண்ணின் மைந்தன் இளம் விவசாயி கார்த்திக்.
தனது வீட்டின் அருகே உள்ள காலி நிலத்தில் காய்கறிகளை நட்டு இன்று விவசாயத்துறையிலும் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இவர். கடந்த முன்று மாதங்களாக வெள்ளரிக்காய் செடிகளை பயிரிட்டு, முழு கவனத்தையும் அதன் மீது வைத்து இரவு பகலாக உழைப்பை போட்ட பின் இன்று புன்னகை முகத்துடன் அதன் பலனை அனுபவிக்கிறார் கார்த்திக்.
தனது நண்பர்களுடன் வெள்ளரிக்காய்களை அறுத்து அதனை கையில் பிடித்து மகிழ்ந்தார்.
கெடா மாநில இளைஞர்கள் இவருக்கு ஆலோசனை வழங்கி விவசாயத்துறையின் முன்னேற உதவியாக இருந்தார்கள் என்று மாநில இளைஞர் பகுதி தலைவர் ஜீவா ஜெயராமன் கூறினார்.
“முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பது நமது பழமொழி.
“விவசாயத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை விதையை போட்ட கார்த்திக்கை போல இந்த நாட்டில் உள்ள இந்திய இளைஞர்களுக்கு வழி காட்ட நாங்கள் பல திட்டங்களை மையப்படுத்தி வருகிறோம்.
“தேசிய ம.இ.கா தலைவரிடமும் தேசிய இளைஞர் பகுதி தலைவரிடமும் எங்களின் திட்டங்களை கொண்டு சென்றுள்ளோம். ஒரு பெரிய உருமாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை தென்பட்டுள்ளது.
ஆகவே, மற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி எதிர்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்” என்று ஜீவா ஜெயராமன் கேட்டுக் கொண்டார்.
மேலும், கார்த்திக் கூறுகையில், “இவ்வேளையில் எனக்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர்களுக்கும் கெடா மாநில இளைஞர் குழுவிற்கும் எனது
நன்றினை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 8 =