விலைவாசி ஏற்றம் நாடாளுமன்றத்தில் அமளி!

KUALA LUMPUR, 11 Nov — Menteri Perdagangan Dalam Negeri dan Hal Ehwal Pengguna Datuk Seri Alexander Nanta Linggi ketika menjawab soalan pada Waktu Pertanyaan-Pertanyaan Menteri sempena Mesyuarat Khas Penggal Ketiga Parlimen Ke-14 di Parlimen hari ini. –fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA

– சந்தையில் பொருள்களின் விலைவாசி கிடுகிடு ஏற்றம் கண்டிருப்பது தொடர்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் சூடான விவாதம் எழுந்தது. ஒரு பக்கம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கிக்குச் சவால் விட்டதற்கு மறுமொழியாக அவர் கிண்டலான பதிலடியைக் கொடுத்து மாறி மாறி அமர்க்களத்தை ஏற்படுத்தினார்கள். டிசம்பர் 9 வரை பொருட்களின் விலை உயர்வு பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் அலெக்சாண்டர் பொறுப்பேற்கத் தயாரா என்று கேள்வி எழுப்ப லிம் குவான் எங் (பக்காத்தான் -பாகன்) எழுந்தபோது அமர்க்கலம் தொடங்கியது. கடந்த நவம்பர் 25ம் தேதி ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், இப்பிரச்சினை தீர்க்கப்பட முடியாவிட்டால் தாம் அதற்குப் பொறுப்பேற்க தயார் என்று நந்தா லிங்கி கூறியதை குவான் எங் மேற்கோள் காட்டினார். இதற்குப் பதிலளித்த நந்தா, அதில் தமக்குச் சிக்கல் எதுவும் இல்லை என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது ஒரு நுணுக்கமான அணுகுமுறை என்றும், அது தமது அமைச்சுக்கு அப்பாற்பட்ட பிற துறைகளையும் சார்ந்தது என்றும் விளக்கினார். இந்த விளக்கத்தோடு நிறுத்தாமல், பக்காத்தானின் 22 மாத ஆட்சியையும் அவர் நாடாளுமன்றத்தில் பகடி செய்யத் தொடங்கினார். ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு, விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவது தங்கள் தலையாயக் கடமை என்று வாக்குறுதியளித்த நிலையில், ஆட்சியில் அமர்ந்த 22 மாத காலத்தில் அந்த இலக்கில் தோல்வியடைந்தாலும், பதவி விலகாமல் இருந்த பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குத்திக் காட்டினார். இந்த வாக்குறுதியை அன்வார் இப்ராஹிம் பல மேடைகளில் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு ரிங்கிட்டுக்குக் குறைக்கப் போவதாக அன்வார் ஆசை வார்த்தைகளைப் பேசி வாக்குகளை வேட்டையாடினார்.நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இடை மறித்து கேள்வி-பதில் நேரம் முடிவுற்றது என்று உத்தரவிட்ட நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் நந்தாவையும் அரசாங்கத்தையும் பல கேள்விகளால் துளைக்கத் தொடங்கினர். இதனால் கேள்வி-பதில் நேரம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =