வியாபாரத் தளங்கள், கிளினிக்குகள், பெட்ரோல் நிலையங்கள் இரவு 7.00 மணிக்கு மூடப்படும்

0
Kuala Lumpur 021118 Petrol Stations

சரவாக்கில் பேரங்காடிகள், காப்பி கடைகள், தனியார் கிளினிக்குகள், உணவகங்கள், 24 மணி நேர கடைகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை காலை 7.00 மணியிலிருந்து இரவு 7.00 வியாபாரத்திற்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் மூடப்படும்.
அம்மாநில பேரிடர் இலாகா கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது என சரவாக் துணை முதலமைச்சர் டத்தோ அமார் டக்ளஸ் உங்கா இம்பாஸ் கூறினார்.
மார்ச் 24 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை அவை அமல்படுத்தப்படும் என்றார் அவர்.
நடமாடும் தடைச் சட்டத்தை அமல்படுத்திய பின்னரும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கோவிட்-19 தொற்றுவதிலிருந்து தங்களை தானே காப்பற்றிக் கொள்ள பொது மக்கள் நலன் கருதி அவை முடிவெடுக்கப்பட்டது என்றும் டக்ளஸ் தெரிவித்தார்.
இரவு 7.00 மணிக்கு கடைகள் மூடப்படுவதால் நடமாடும் தடைச் சட்டத்தில் தங்கள் கடமைகளை செய்து கொண்டிருக்கும் போலீஸார், ராணுவம், மருத்துவ மைய பணியாளர்கள் மற்றும் குடிநுழைவுத் துறையினரை அது பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =