விமான நிலையத்தில் சதி வேலையா?

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையங்களில் அண்மையில் நடந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து விசாரணை நடத்துமாறு மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) காவல்துறையில் புகார் செய்துள்ளது.தீய நோக்கத்தோடு விமான நிலைய பணிகளை முடக்க சதி வேலை நடந்துள்ளது என்ற சாத்தியங்களை எம்ஏஎச்பி மறுக்கவில்லை. இது ஒரு தீய நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையாக இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக அந்நிறுவனம் காவல்துறையில் செய்த புகாரில் கூறியிருக்கிறது. இது பற்றி புகார் கிடைத்திருக்கிறது என்பதை கேஎல்ஐஏ காவல்துறை உதவி ஆணையர் ஸுல்கிப்ளி அடாம்ஷா உறுதிப்படுத்தினார்.
கேஎல்ஐஏ மற்றும் கேஎல்ஐஏ2 ஆகிய 2 விமான நிலையங்களிலும் அண்மையில் நடந்த தொழில்நுட்பக் கோளாறினால் பல சேவைகள் நிலைகுத்தின. குறிப்பாக பயணச் சேவை முகப்பிடம். விமானப் பயண அட்டவணை திரை, வை பை தொடர்பு செயலிழப்பு, பயணிகள் பெட்டி பிரிவு செயலிழப்பு ஆகியவற்றால் ஏராளமான பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு இலக்காகினர்.
அதன் தொடர்பு சாதனம் ஒன்றை எம்ஏஎச்பி மாற்றியதைத் தொடர்ந்து படிப்படியாக இந்த சேவைகள் வழக்க நிலைக்கு திரும்பின. எனினும் இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்பதையும் தாண்டி விமான நிலையத்தை செயலிழக்கச் செய்ய நடந்த சதி என்று இப்போது சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − nine =