விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகள் மீது தாக்குதல்

0

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 2 குடிநுழைவுத்துறை அதிகாரிகளை 2 சீன ஆடவர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.அந்த 2 ஆடவர்களும் மற்றொரு சீன நாட்டுப் பெண்மணியும் தரையிறங்க முடியாது என்ற உத்தரவைப் பெற்றிருந்தனர். சனிக்கிழமை பின்னிரவு 12.30 மணியளவில் வெளிநாட்டு வருகையாளர்களுக்கான பிரிவில் நின்றிருந்தனர்.அந்தப் பிரிவின் பெண்கள் பகுதியில் அவர்கள் நடமாடிக் கொண்டிருந்த வேளையில், சந்தேகமடைந்த குடிநுழைவுத்துறை அதிகாரிகள், அவர்களிடம் சென்று ஆண்கள் வரிசையில் நிற்குமாறு கேட்டுக் கொண்டபோது ஆத்திரமடைந்த அவர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததோடு அவர்களைத் தாக்கினர். இதர அதிகாரிகள் ஓடி வந்து சண்டையை விலக்கினர். அந்நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக குடிநுழைவு தலைமை அதிகாரி டத்தோ கைருல் ஸைமி டாவுட் தெரிவித்தார்.
இதனிடையே அந்த 2 சீன ஆடவர்களும் ஒரு பெண்ணும் திரும்ப சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களின் பெயர்கள் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 2 =