விமானத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டல்! ஏர் ஆசியா விமானம் திருப்பி விடப்பட்டது

கொல்கத்தாவிலிருந்து மும்பாய்க்குச் சென்று கொண்டிருந்த ஏர் ஆசியா விமானம், பயணி ஒருவரின் மிரட்டலின் காரணமாக புறப்பட்ட இடத்துக்கே திருப்பி விடப்பட்டது.
ஜனவரி 11ஆம் தேதி பயணத்தில் இருந்த 15315 என்ற விமானத்தின் பயணி மோகினி மண்டோல் (வயது 25) விமானத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டியதால்வேறு வழியில்லாமல் அந்த விமானம் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.
40 நிமிட பயணத்துக்குப் பின்னர், அந்தப் பெண் தமது உடலில் வெடிகுண்டைக் கட்டிக் கொண்டு விமானத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டுகிறார் என்று விமானச் சிப்பந்தி ஒருவர் விமானிக்குத் தகவல் தெரிவித்துள்ளார்
அதன் பின்னர், விமானி ஆபத்து என அறிவித்து விமானத்தை கொல்கத்தா விமான நிலையத்தில் இரவு 11 மணிக்கு தரையிறக்கினார்.
பின்னர், அந்தப் பெண்ணைப் பரிசோதித்ததில் அவரிடம் எந்தவொரு வெடி குண்டும் காணப்படவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டதற்கு என்ன காரணம், அந்த விமானத்தில் பயணம் செய்தது ஏன், கொல்கத்தாவுக்குத் திரும்ப வேண்டிய காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
பரிசோதனைக்குப் பின்னர் அந்த விமானம் மும்பைக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =