விபத்தில் சிக்கியவர்களைச் சந்தித்தார் மாமன்னர்

அலுவல் காரணமாக சென்று கொண்டிருந்த மாமன்னர், இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கியவர்களை கரிசனையுடன் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.


இந்த இரண்டு விபத்துகளும் நேற்று காலை பெய்த கனத்த மழையால் ஏற்பட்டன என்று நம்பப்படுகிறது. விபத்தில் கடுமையாக சேதமுற்ற கார்களையும் பார்வையிட்ட அவர், தம் காரை நிறுத்தி, சாலையில் இறங்கிச் சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தார். அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது.


புத்ரா ஜெயாவில் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட தம்பதியரைச் சந்திக்க அவர் சாலைத் தடுப்பையும் மீறிச் சென்றுள்ளார். இந்த மழை காலத்தில் பொது மக்கள் கவனமாக சாலையில் பயணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 6 =