விதிமுறைகளை மீறும் மனமகிழ்வு மையங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

0

மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் செயல்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்ட கேளிக்கை மற்றும் மனமகிழ்வு மையங்களின் லைசென்சுகளை ரத்து செய்ய அரச மலேசிய போலீஸ் படைக்கும், ஊராட்சித் துறைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கேளிக்கை மற்றும் மனமகிழ்வு மையங்களை உள்ளடக்கிய பி.கே.பி.பி. மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இத்தகைய கடுமையான நடவடிக்கை அவசியமாகும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
“கேளிக்கை மற்றும் மனமகிழ் மையங்களை கட்டாயம் திறக்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளோம்.
அதனால்தான் இரவு நேர மனமகிழ் மையங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனால் சம்பந்தப்பட்ட மையங்களின் உரிமையாளர் லைசென்ஸ் கொண்டு தங்களின் மையங்களை நடத்தினால் உடனே அந்த லைசென்சுகளைப் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட மையங்களையும் மூட ஊராட்சித் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது’’ என்று அவர் குறிப்பிட்டார்.
கேளிக்கை மற்றும் இரவு நேர மனமகிழ்வு மையங்கள் மீண்டும் செயல்படுவதற்கான எவ்வித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
அதேவேளையில், சபாவிலிருந்து திரும்பியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
சபாவில் உறுதிப்படுத்தப்பட்ட பெந்தேங் எல்டி (க்ஷநுசூகூநுசூழு டுனு) புதிய தொற்றால், இதுவரையில் தாவாவ்
மற்றும் லாஹாட் டத்து ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த
22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =