விண்வெளிக்கு கண்ணாடிக் கோளம் அனுப்பும் ரஷியா

0

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்கா, ரஷியா,  கனடா உள்ளிட்ட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி  வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணியை கவனிக்கின்றனர். 
இந்நிலையில், பூமியைப் பற்றி துல்லியமான புள்ளிவிவரங்களை அறியவும் ஈர்ப்பு புலத்தை துல்லியமாக அளவிடவும் கோள  வடிவிலான கண்ணாடி செயற்கைக்கோளை அனுப்ப ரஷிய விண்வெளி மையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
இது குறித்த ஆவணங்களில் உள்ள தகவல்களின் படி, பிலிட்ஸ்-எம் (BLITS-M) எனப்படும் இந்த கண்ணாடி செயற்கைக்கோள்  ரஷ்யாவின் BLITS (பால் லென்ஸ் இன் தி ஸ்பேஸ்) செயற்கைக்கோளில் இருந்து மேம்படுத்தப்பட்டதாகும். வரும் டிசம்பர் மாதம் 25ம்  தேதி மூன்று கோனெட்ஸ்-எம் வகை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படும். 
இது புவி இயற்பியல், புவி இயக்கவியல் மற்றும் சார்பியல் தொடர்பான செயற்கைக்கோள் லேசர் வரம்பின் (எஸ்.எல்.ஆர்) தரவைப் பெற வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மேலும் ரஷிய குளோபல் சாட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம் அமைப்பின் துல்லியத்தை அதிகரிக்கவும், சுற்றுப்பாதையில் பல்வேறு  வானொலி அமைப்புகளை அளவீடு செய்யவும், பூமியின் சுழற்சி அளவுருக்கள் மற்றும் ஈர்ப்பு விசையின் துல்லியமான பண்புகள்  ஆகியவற்றை தீர்மானிக்கவும் இது பயன்படுத்தப்படும். 
ரஷ்யா 2009 ஆம் ஆண்டில், முதல் BLITS நானோ சாட்டிலைட்டை ஏவியது. கண்ணாடியால் செய்யப்பட்ட இரண்டு வெளிப்புற  அரைக்கோளங்கள் மற்றும் உள்புறம் கண்ணாடி பந்து லென்ஸைக் கொண்ட இந்த செயற்கைக்கோள், 2013 ஜனவரி மாதம் சீனாவின்  ஃபெங்கியூன்-1சி செயற்கைக்கோளின் உடைந்த ஒரு துண்டுடன் மோதியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + ten =