விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்!

  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான பிரிட்டனின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. பிரிட்டனில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக 2018இல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது. இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார்.

  இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர்கள் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
  பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
  இந்த வழக்கு விசாரணையில், விடுதலைப்புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற் கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
  இந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், விடுதலை புலிகள் இயக்கம் மீதான பிரிட்டனின் தடை தவறானது என அதிரடி தீர்ப்பை வழங்கியது.
  மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  கடந்த ஜூலை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத் லெய்ங், ரிச்சர் விட்டாம், ஃபிலிப் நெல்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது.
  அதில் விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை நீட்டிக்க, உள்துறை கவனத்தில் கொண்ட ஆதாரங்களும் காரணங்களும் போதுமானதாக இல்லை.
  பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடாத போதிலும், அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உள்துறை கவனத்தில் கொள்ளவில்லை” அந்த தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  2 + 8 =