விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல!

தீவிரவாதப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரை அகற்றும்படி உள்துறை அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ முஹிடின் யாசினை கேட்டுக் கொண்டதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் உறுதிப்படுத்தினார்.பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் உள்துறை அமைச்சராக முஹிடின் யாசின் பொறுப்பேற்றார். அப்போது பிரதமராக இருந்த நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

தீவிரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கும்படி நான் அவரைக் கேட்டுக் கொண்டேன், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது சிலருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையை எதிர்த்தேன்.
இருப்பினும் இவ்வாண்டு பிப்ரவரி 12ஆம் தேதி நான் எழுதிய அந்தக் கடிதமானது விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமாகாது என்றார் அவர்.
எதற்காக நாம் பிரச்சினைகளைத் தேடிக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் விவகாரம் ஸ்ரீலங்காவில் நடைபெற்றது. அதற்காக நாம் இங்குள்ளவர்கள் மீது அது போல் நடவடிக்கை எடுக்க முடியாது. இது மலேசியாவுக்கு நல்லதல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதே போல், ஹமாஸ் தீவிரவாத இயக்கமும் அமெரிக்காவால் தீவிரவாத இயக்கம் என குறிப்பிடப் பட்டுள்ளது. உலகமும் ஹமாஸ் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என கூறுகிறது.
ஹமாஸ் இயக்கம், தீவிரவாதம் என்றால் அதன் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஏன் என்னைச் சந்திக்க வேண்டும். நான் ஏன் அவரைச் சந்தித்தேன். அந்த இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று நான் குறிப்பிடவில்லையே என்றார் அவர்.
அந்த வகையில் தீவிரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரையும் நீக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டேன் என்றார் அவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக ஜசெகவைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களான எம்.குணசேகரன், ஜி.சாமிநாதன் உட்பட 12 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கைது ஆணை தொடர்பில் 12 பேரை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது எனக்கூறி முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் அறிவித்ததைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் பிப்ரவரி மாத இறுதியில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போரினால் அங்கு லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 10 =