விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக சொஸ்மா சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கும் அதன் பிரசுரங்களையும் பொருள்களையும் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில், கோலகங்சாரைச் சேர்ந்தவரான பி. பாலமுருகன் அந்த மனு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதன் விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி மரியானா யஹாயா முன்னிலையில் விசாரணைக்கு வரும்.
பாலமுருகனுக்கு ஆஜரான வழக்கறிஞர் ஒமார் குட்டி அப்துல் அஸிஸ், 2014ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் விதித்திருந்த அந்த உத்தரவை அகற்ற தாங்கள் முனைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அந்த மனு கடந்த மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு சட்டத்துறை அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
பாலமுருகனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முடிவு வரும் என அவர் தெரிவித்தார்.
2014 டிசம்பர் 28ஆம் தேதி கோலகங்சார் ஊராட்சி மன்ற மண்டபத்தில் விடுதலைப் புலிகள் சம்பந்தமான நிகழ்ச்சியில் அவர்களை ஆதரித்து தமது கைபேசியில் விடுதலைப் புலிகளின் செய்தியை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதே போன்று வேறொரு இடத்தில் அதே குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் சிறை அல்லது 30 ஆண்டு காலச் சிறை விதிக்கப்படலாம்.
அவரின் வழக்கு கோலகங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − sixteen =