விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்த தே.மு. அரசாங்கம்!

0

கடந்த 30.11.2019 சனிக்கிழமையன்று தமிழ் மலர் நாளேட்டில் ’ தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்; பக்காத்தான் தோல்விக்கு காவல் துறையும் ஒரு காரணம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கடந்த அரசாங்கத்தின் ஆதரவு பற்றி இன்றைய கட்டுரையில் தெரிவிக்கவுள்ளேன். முந்தைய அரசாங்கமான தேசிய முன்னணி அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு முழு ஆதரவு வழங்கியிருந்ததை என்னால் உறுதிபடக் கூறமுடியும். காரணம் நஜிப் பிரதமராக இருந்த காலகட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அங்கிருந்த சிறுவர்களுக்கும் உதவும் வகையில் மலேசிய அரசாங்கத்தின் பங்களிப்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை (அப்போது வெ. 3.2 மில்லியன்) அவர் தனி ஓர் இயக்கத்திடம் வழங்கியிருந்தார்.


போரில் பாதிப்பை எதிர்நோக் கியவர் களுக்கு உதவியாக இருக்கும் நோக்கில் அந்த நிதியானது வழங்கப்பட் டிருந்தாலும் யாரிடம் அந்த நிதி ஒப்படைக்கப்பட்டது என்ற பின்னணியை அலசி ஆராய் கையில் ஈழ போரு க்கு ஆதரவாக நிதி திரட்டி வழங்கிய ஓர் அமைப்பிடம் பிரதமர் அந்நிதியை ஒப்படைத்துள்ளார்.
தமிழீழ விடு தலைப் புலிகளின் ஆதரவு அமைப்பாக வழக்கறிஞர் பசுபதி, வழக்கறிஞர் க.ஆறு முகம், பேராசிரியர் ஐங்கரன் ஆகியோர் இணைந்து மலேசிய தமிழ் மன்றம் என்ற அமைப்பை கடந்த 2010ஆம் ஆண்டு நிறுவினர். அந்த அமைப்பின் மூலமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போரை சுட்டிக்காட்டி அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மில்லியன் கணக்கில் நிதி திரட்டினர். அந்த நிதி திரட்டும் குழுவிற்கு கனகராஜா தலைமையேற்றார்.
மனிதாபிமான முறையில் பலரின் கூட்டு முயற்சியாக திரட்டப்பட்ட இந்த பெரிய நிதியானது எவ்வாறு ஈழ மக்களுக்கு செலவிடப்பட்டது? பகிர்ந்தளிக்கப்பட்டது உள்ளிட்ட எவ்வித ஆதாரங்களையும் கணக்கு வழக்குகளையும் அந்த அமைப்பு முறையாக காட்டவில்லை.


அத்தகைய அமைப்பிற்கு முன்னாள் பிரதமர் நஜிப் இந்த பிரமாண்ட நிதியை வழங்கி ஈழ மக்களுக்கு உதவி செய்யுமாறு கூறியிருந்தார். அந்த அமைப்பைப் பற்றி அவருக்கு தெரிந்திருந்ததோ இல்லையோ, இதுபோன்ற உதவிகளை செய்யும் முன்னர் சம்பந்தப்பட்ட அந்த மன்றத்தின் பின்புலத்தைப் பற்றி நன்கு அறிந்து பின்னர் வழங்கியிருக்க வேண்டும்.
இந்த விவகாரம் காவல் துறைக்கு தெரியாத ஒன்றா? இதுபற்றி ஊடகங்களிலும் பல முறை செய்திகள் பிரசுரிக்கப்பட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையையோ விசாரணையையோ முன்னெடுக்கவில்லை. மலேசிய தமிழ் மன்றம் அமைப்பு மட்டுமின்றி அந்த நிதியை வழங்கிய முன்னாள் பிரதமரிடமும் அவர்கள் எவ்வித வாக்குமூலத்தையும் பெறவில்லை. ஆக இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் முதலில் கூறியதுபோல விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தேமு அரசாங்கம் ஆதரவு வழங்கியுள்ளது அப்பட்டமாக தெரிகிறதல்லவா?


தொடக்கத்திலேயே அவர்கள் மீது விசாரணை மேற்கொண்டிருக்க வேண்டும். அதையெல்லாம் விடுத்து விடுதலைப்புலிகள் படத்தை வைத்திருந்தார்கள், கொடியை வைத்திருந்தார்கள் என்று சப்பைக்கட்டு கட்டி 12 பேரை காவல்துறை அண்மையில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து இதுவரையில் தடுத்து வைத்திருக்கிறது.
காவல் துறை ஏன் இந்த திடீர் வேட்டையை முடுக்கியது என்று ஆராய்ந்து பார்க்கையில் அதன் மூலமாக ஸக்கீர் நாயக் என்பவர் இருக்கிறார் என்பது தெரியவருகிறது. ஸக்கீர் நாயக் மலேசியாவில் காலடி எடுத்து வைத்தது முதல் இங்கிருக்கும் சீனர்கள், இந்தியர்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை சினமூட்டும் வகையில் பேசி வந்தார். அப்போது நாடு தழுவிய அளவிலிருந்து அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. அந்த சமயத்தில் மக்களின் வாயை அடைக்க வேண்டும் என்ற வேட்கையில் காவல் துறை இந்த 12 பேரைக் கைது செய்து காய் நகர்த்தியுள்ளது.
இதனிடையே, நஜிப் வழங்கிய அந்த 1 மில்லியன் டாலர் நிதி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவனும் கேள்வி எழுப்பியிருந்தனர். அந்த நிதி வழங்கியதற்கான போதுமான ஆதாரம் அரசாங்கத்திடம் இல்லை. ஒருவேளை உங்களிடம் இருந்தால் நீங்கள் தாராளமாக போலீஸ் புகார் செய்யலாம் என கேசவனுக்கு பிரதமர் துன் மகாதீர் பதிலளித்திருந்தார்.
இந்த ஒரு மில்லியன் டாலர் நிதி வழங்கிய விவகாரம் அனைத்து பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் ஆதாரம் இல்லை, இருந்தால் புகார் செய்யுங்கள் என்று அவர் சொல்வது வேடிக்கையாக உள்ளது.
கடந்த கால அரசாங்கம் செய்த தவறுகளை பக்காத்தான் அரசாங்கமும் செய்யாமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஓர் இயக்கத்தையோ அல்லது அமைப்பையோ பற்றி நன்கு அறிந்த புரிந்த பின்னரே அதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
இந்தியர்களைப் பிரதிநிதித்து 3 அமைச்சர்கள் நமக்கு இருக்கின்றனர்.
இதுபோன்ற இயக்கங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக கண்மூடித்தனமாக அவர்கள் ஆதரவும் வழங்கி வருகின்றனர். இது குறித்த விளக்கத் தகவல்களுடன் விரைவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 9 =