விசுவாசமற்ற தேசிய முன்னணி அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேமு தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி எச்சரித்தார்.“நேரம் வரும்போது நான் எப்படி நடந்து கொள்வேன் என்பது குறித்து இத்தகைய அரசியல்வாதிகளுக்குத் தெரியவரும்”, என அம்னோ தலைவருமான அவர் சொன்னார்.
“நாம் ஊர்வன விலங்குகள் அல்ல. நாம் தாவும் ஊர்வன விலங்குகளாகவும் மாறக் கூடாது”, என முன்னாள் உள்துறை அமைச்சருமான அவர் நேற்று 66ஆவது மசீச பேராளர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின் பேசினார்.