விசாரணை அறிக்கையை வெளியிடுங்கள்!

கடந்த 2016இல் ஜொகூர்பாரு சுல்தான் அமினா மருத்துவமனை தீச் சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிடும்படி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் மீது குறிப்பாக பக்காத்தான் ஹராப்பான் பழி சுமத்துவதால் இது அவசியம் என்றார் அவர். இந்த விசாரணை அறிக்கை தயாராகி நீண்ட நாட்கள் கடந்தும், முன்னாள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அதை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 14ஆவது பொதுத் தேர்ர்தலுக்குப் பிறகு 2018 ஜூன் 6ஆம் தேதி இந்த விசாரணை அறிக்கை தயாராகி விட்டது.
இந்த அறிக்கை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்குத் தலைமையேற்ற 7ஆவது பிரதமர் துன் மகாதீரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக தேசிய முன்னணியின் முன்னாள் தலைவருமான நஜிப் குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பான் அமைச்சரவையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்பதால், இந்த அறிக்கையை வெளியிட முடியாது என பக்காத்தான் ஹராப்பான் சுகாதார அமைச்சர் 2018 நவம்பரில் கூறியிருந்ததாக அவர் சொன்னார்.
ஆகையால் இந்த அறிக்கையை தாமதமின்றி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் வெளியிட வேண்டும் என நஜிப் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =