விக்னேஸ்வரன் மீதான சில வழக்குகள் நிலுவையில் உள்ளன

0

மனிதவள மேம்பாட்டு நிதியகத்தின் முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரியான சி.எம்.விக்னேஸ்வரன் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் சில இன்னும் நிலுவையில் இருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) குறிப்பிட்டுள்ளது.

அவர் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு மட்டுமே ரத்து செய்யப்பட்டதாகவும் இன்னும் சில அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பண மோசடி வழக்குகளின் விசாரணைககள் தொடர்ந்து நடந்து வருவதாக எம்ஏசிசியின் துணை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த நிதியகத்தின் 30 கோடி ரிங்கிட் மோசடி செய்யப்பட்டதாகவும் அதன் நிதியானது சில சொத்துகளை வாங்கவும் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு மேலதிக சம்பளமும் போனஸும் வழங்க செலவிடப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்திருந்தார்.

சில விவகாரங்களில் அந்த நிதியகத்தின் வாரியத்தின் அனுமதியின்றி செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். பயிற்சி வழங்கும் வகையில் நிதியகத்தின் பணத்தைச் சில அதிகாரிகள் கையாடல் செய்திருக்கின்றனர்.

2018 ஜூனில் விக்னேஸ்வரன் தமது பதவியில் இருந்து விலகினார். நேற்று அவர், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மீண்டும் தமக்குப் பொறுப்பு வழங்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =