வாழ்வாதாரத்தை இழந்து வழியின்றி தவிக்கிறோம்


  நாடு தழுவிய நிலையில் உள்ள சிகை அலங்கார கடை உரிமையாளர்கள் கடந்த மூன்று முறை விதிக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையால் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து விடுகிறோம் எனவே எங்களுக்கு நாட்டின் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நாட்டில் உள்ள சிகையாலங்கார கடை உரிமையாளர்களுக்கு மானியம் வழங்குவதுடன் வட்டியில்லா கடனுதவியும் வழங்க வேண்டும் என்று வட மாநில இந்தியர் சிகையலங்கார சமூகநல இயக்கத்தின் தலைவர் புவனேஸ்வரன் சக்திவேல் தன் உறுப்பினர்கள் சார்பாக உருக்கமான வேண்டுகோளை அரசாங்கத்திடம் முன் வைத்தார்.
  சேவை துறையான சிகையலங்கார கடைகள் முதல் கட்ட கட்டுப்பாட்டு ஆணையில் மூன்று மாதங்கள் கடைகளை அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிறகு இரண்டாம் கட்ட ஆனையில் ஒரு மாதகாலம் கடை கடைகள் அடைக்கப் பட்டன, தற்போது மூன்றாம் கட்ட கட்டுபாட்டு ஆணையில் 14 நாட்கள் கடையடைப்பு, இது மேலும் அதிகரிக் கப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என்று புவனேஸ்வரன் கூறினார். மிகவும் சிரமத்துக்குள்ளான எங்களின் பெரும்பாலான சங்க உறுப்பினர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறனர் என அவர் கூறினார். வாட மாநிலங்களில் 400க்கும் மேற்பட்ட சிகையலங்கா கடைகளின் உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி பொரு ளாதார சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை அரசாங்கம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
  நாங்கள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம் அதில் அனைத்து கடைகளுக்கும் மானியமும், தேசிய சேமிப்பு வங்கியின் வழி வட்டியில்லா கடனுதவியும் வழங்கப்பட வேண்டும் என்று வட மாநில சிகையலங்கார சமூகநல இயக்கத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்வதாக புவனேஸ்வரன் கூறினார்.
  அதே வேளையில் எங்கள் கடைகளில் நாங்கள் மிகவும் கடுமையான, எஸ்ஓபி நிர்வாக நடைமுறையை கடைப்பிடித்து வருகிறோம், உதாரணத்திற்கு முககவசம், பாதுகாப்பு ஆடை மேலும் கையுறை என பலவகையில் நாங்கள் கடுமையான நிர்வாக நடைமுறையை கடைப்பிடித்து வருவதால் கூடிய விரைவில் நாங்கள் கடையைத் திறக்க அனுமதியும், மானியமும், வட்டியில்லா கடனுதவியையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வட மாநில சிகையலங்கார சமூகநல இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொள்கிறோம் என்று அதன் தலைவர் புவனேஸ்வரன் சக்திவேல் கேட்டுக்கொண்டார்.

  இக்கோரிக்கையை அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பதுடன் நாங்கள் இருக்கிறோம், கடை வாடகை, வாங்கிய கடனுதவிகளை மீண்டும் செலுத்துவதில் பல சிகை அலங்கார உரிமையாளர்கள் மிகவும் சிரமப்படுவதாக பினாங்கு மாநில அளவில் உள்ள சிகையலங்கார கடைகளின் உரிமையாளர்களான காளிதாஸ், சங்க செயலாளர் ஏ.முரளி, எம்.குமார், எம்.தினேஷ்வாரி, என்.நாகநாதன், கே.தமிழ்ச்செல்வன், எஸ்.கங்காதரன், வீரகுமரன், டி.சூரியராஜ், ஏ.சுந்தர், குபேரன், சங்கத் தலைவர் எஸ்.புவனேஸ் வரன் தலைமையில் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  10 + fifteen =