
ஆஸ்திரேலியாவின் ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன் 52. விடுமுறைக்காக தாய்லாந்தின் கோ சாமுய் தீவுக்கு சென்றிருந்தார். அங்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பிரேத பரிசோதனை முடிவில், ‘வார்ன் மரணம் இயற்கையானது,’ என தெரிய வந்தது. தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து வார்ன் உடல், ஆஸ்திரேலிய தேசியக் கொடி போர்த்தப்பட்டு, தனி விமானத்தில் கிளம்பியது.
வியாழன் இரவு மெல்போர்னில் உள்ள எசெண்டன் பீல்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது. வார்ன் நண்பர்கள், தனி உதவியாளர் ஹெலன் நோலன், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கில் விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர்.
வார்ன் உடலுக்கு அவரது குடும்பத்தினர் சார்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளன. இதன் பின் மெல்போர்னில் நடக்கும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 1 லட்சம் பேர் திரள உள்ளனர். தவிர ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், விக்டோரியா மாகாண தலைவர் டேனியல் ஆன்ட்ரூஸ் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.