வாடிக்கையாளர்களிடம் பணப் பறிப்பு – பினாங்கு போலீசார் விசாரிக்கப்படுவர்

File Picture

கேளிக்கை நிலையத்தில் வந்த வாடிக்கையாளர் களிடமிருந்து பாதுகாப்புப் பணம் பறித்த ரோந்துப் போலீசார் குறித்து புகார் கிடைக்கப்பட்டதாகப் பினாங்கு போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

விசாரணையில், 3 எம்பிவி வாகனத்தில் சென்ற 6 போலீசார் அதில் சம்பந்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகப் பினாங்கின் இடைக்காலப் போலீஸ் தலைவர் ரோஸ்லி சிக் தெரிவித்தார்.

அதிகாலை நேரத்தில், கேளிக்கை மையத்திலிருந்து குடிபோதையில் வெளியேறிய வடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை அந்தப் போலீசார் வசூலித்ததாகத் தெரிய வந்துள்ளது.

அந்தப் போலீசாருக்குப் பாதுகாப்புப் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டோர், முன்வந்து புகார் அளிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =