வாசனை ஊரையே கூட்டும் ஹைதராபாத் பிரியாணி மசாலா பொடி

தேவையான பொருட்கள்

பிரிஞ்சி இலை – 5 இலை

பட்டை – இரண்டு இன்ச் சைஸ் – 3
கிராம்பு – 10 எண்ணிக்கை
ஏலம் – 6 எண்ணிக்கை
மிளகு – ஒரு மேசைகரண்டி
ஷாஜீரா – ஒரு மேசைகரண்டி
சீரகம்- இரண்டு மேசைகரண்டி
ஜாதிக்காய் – ஒரு சிறிய துண்டு
ஜாதிபத்திரி – முன்று இதழ்
அன்னாசி பூ – ஒன்று

இதில் மிளகாய் தூள் மற்றும் தனியாதூள் தேவைக்கு சமைக்கும் கறி வகைகளை பொருத்து அதற்கேற்றாற் போல் சேர்த்து கொள்ளுங்கள்.

செய்முறை

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எல்லாம் காய்ந்த ஈரமில்லாத மிக்சியில் அல்லது பவுடர் செய்யும் மிக்சியில் திரித்து பவுடராக்கி, சிறிது நேரம் ஆறவைத்து ஈரமில்லாத காய்ந்த கண்டெயினர்களில் போட்டு வைத்து கொள்ளவும்.

பிளாஸ்டிக் கண்டெயினரை விட காய்ந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் மிகவும் நல்லது.

இதில் பிரிஞ்சி இலையின் காம்பை கிள்ளி விட்டு திரிவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + seven =