வாக்களிப்பு தினத்தன்று கோவிட்-19 தந்திரோபாயம்

சனிக்கிழமை நடைபெறவிரு க்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் ‘கோவிட்-19 தந்திரோபாயத்தை’ எதிர்க் கட்சிகள் கையாளக்கூடும் என முன்னாள் சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் முகமடின் கெத்தாப்பி குற்றஞ்சாட்டினார்.
வாக்களிப்பதற்கு வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த இந்தத் தந்திரம் கையாளப்படலாம் என லாஹாட் டத்து நாடாளுமன்ற உறுப்பினரும் செகாமா சட்டமன்றத் தொகுதிக்கான வாரிசான் வேட்பாளருமான அவர் சொன்னார். வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு தினத்தன்று கோவிட்-19 தொற்று கண்டு மயங்கி விழுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அந்நேரத்தில் மயங்கி விழுபவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரும்போது அங்குள்ள இதர வாக்காளர்கள் பயந்து வீட்டுக்கு ஓடிவிடுவார்கள் என அவர் சொன்னார்.
இந்த பொய் நாடகத்திற்காக மக்களுக்கு பணம் கொடுக்கப்படலாம். ஆகையால் இது கோவிட் தொற்று அல்ல. இது போன்ற நாடகத்தை எதிர்க்கட்சிகள் அரங்கேற்றக் கூடும் என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 7 =