வாக்களிக்கும் வயது 18; நாட்டின் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் சக்தி

0

ஈப்போ, ஆக. 21-
வாக்களிக்கும் வயது 18ஆகக் குறைக்கப்பட்டிருப்பதை இளையோர்கள் நாட்டின் தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரு சக்தியாகக் கருத வேண்டும் என்று மேன்மை தங்கிய பேரா சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார்.
இதை ஓர் உரிமையாக மட்டும் அவர்கள் கருதக்கூடாது. மக்கள் – நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சக்தியாக இதை இளைஞர்கள் கருத வேண்டும்.
எப்போதுமே நியாயபூர்வமான சிந்தனைகளை இளைஞர்கள் பெற்றிருக்க வேண்டும். வெறும் உணர்ச்சி வழியில் செயல்படக்கூடாது என்றார் அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற ’உங்கு ஒமார் தொழில்நுட்பக் கல்லூரியின் 48 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். மொத்தம் 2,270 பட்டதாரிகள் நேற்று பட்டம் பெற்றனர்.
ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்ற புரிதலை இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும். ஓர் அரசாங்க முறை, ஓர் அரசாங்க நிர்வாகம், அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் தன்மை இவை குறித்து அவர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்றார் சுல்தான். இளைஞர்கள் சிறந்த தார்மீக நெறிகளைக் கொண்டிருக்க வேண்டும். எது நல்லது, எது கெட்டது, எது உண்மை, எது பொய் என்பதை தெளிந்து உணரும் தன்மை கொண்டவர்களாக இளைஞர்கள் விளங்க வேண்டும் என்றார் அவர்.
தேசிய நிலை குறித்து ஆற்றலும் போதுமான தகவலும் கொண்டவர்களாக அவர்கள் விளங்க வேண்டும். 15லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு தரப்பட்டுள்ள உரிமை அவர்களின் தலைமைத்துவ ஆற்றலுக்கானது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 2 =