வாகன மோட்டிகளை மிரட்டும் பழுதடைந்த சாலை

0

பூச்சோங், 8ஆவது மைல் சாலை மோசமான நிலையில் வாகனமோட்டிகளுக்கு மருட்டல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சாலையில் குன்றும் குழியுமாக நீர் தேக்கத்துடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் அவ்வழியே பயணிக்கும் வாகனமோட்டிகளுக்கு இதனால் பேராபத்து ஏற்படும் என சுபாங் ஜெயா நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினருமான பிகேஆர் மைக்கல் தமிழ் கருத்துரைத்தார். அண்மைய காலமாக அன்றாடம் பெய்யும் கடும் மழை காரணமாக அருகில் உள்ள கால்வாயில் நீரோட்டம் நிரம்பி வழிகிறது, இதனால் குழிவிழுந்து பழுதடைந்திருக்கும் சாலை வாகன மோட்டிகளுக்கு தெரிவதில்லை. மோட்டார் சைக்கிளோட்டிகள் அவ்வப்போது பள்ளி செல்லும் பிள்ளைகளை ஏற்றிச் செல்கின்றனர். சாலையில் ஏற்பட்டிருக்கும் நீர்தேக்கமும் குழியும் தென்பட வில்லை என்றால் விபத்துகள் ஏற்படக்கூடும். மேலும் இரவு நேரங்களில் பயணிக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் வாகனமோட்டிகளும் நிலை தடுமாறுகின்றனர். சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =