வாகனங்கள் பெருகிய போதிலும் போக்குவரத்து சுமூகமாக உள்ளது!

மாநில எல்லையைக் கடக்க நேற்று நள்ளிரவு தொடங்கி அனுமதிக்கப் பட்ட போதிலும் தலைநகரிலிருந்து வெளியேறும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதோடு வழக்கத்திற்கு மாறாக ஏதும் காணப்படவில்லை என்று புக்கிட் அமான் சாலைப் போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணத் துறை இயக்குநர், டத்தோ மாட் காசிம் கரிம் தெரிவித்தார். நாடு இன்னும் கோவிட் தொற்றின் பிடியில்தான் இருப்பதால் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மாநில எல்லையைக் கடக்க மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பில் கோம்பாக், ஜாலான் டூத்தா டோல் சாவடிகளில் மேற்கொண்ட கண்ணோட்டத்தின்படி அங்கு வாகனங்கள் பெருகி விட்டப் போதிலும் போக்குவரத்து ஓட்டம் வழக்கம் போல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோம்பாக் டோல் சாவடியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு அங்கிருந்து 300 மீட்டர் தூரத்திற்கு நள்ளிரவு 12.00 மணிக்காக வாகனங்கள் நின்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டதாக பத்திரிகையாளர்களிடம் மாட் காசிம் கரிம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − seven =