வழிப்பறி செய்து வந்த நபர்கள் கைது

இம்மாதம் 10ஆம் தேதி நண்பகல் 1 மணியளவில் தாமான் டேசாவிலுள்ள எண்ணெய் நிலையத்தில் வழிப்பறி செய்ய முயற்சிக்கையில் தோல்வி கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அன்வார் பின் ஹாஜி ஒமார் தெரிவித்தார். இதன் தொடர்பாக பிரிக்பீல்ட்ஸ் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் ஜாலான் மிடாவிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 2 ஆடவர்களை கைது செய்தனர் என்று அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 3 விதமான மோட்டார் சைக்கிள்கள், 2 தலைக்கவசங்கள், 2 கைத்தொலைபேசிகள் , கொள்ளைக்கு பயன்படுத்தும் முகமூடியும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று ஏசிபி அன்வார் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 25 வயதுடையவர்களாவர் என்றார் அவர். பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளில் அலைந்து சந்தேகிக்கப்படும் வகையில் நடந்து கொள்பவர்களைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்குமாறு ஏசிபி அன்வார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + nineteen =