வழக்குகளுக்கு சமரசம் காண அம்னோ தலைவர்கள் படையெடுப்பா?

0

ரோஸ்மாவின் மகன் ரிஸா அஸிஸ் தமது வெளிநாட்டுச் சொத்துகளை அரசிடம் திருப்பிக் கொடுப்பதாக சம்மதம் கொடுத்ததை அடுத்து, ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும் 25க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், சட்டத் துறை அலுவலகத்தை நாடியிருப்பதாக சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.ரிஸா அஸிஸ் தமது 5 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, அதே போன்று திருடிய சொத்துகளைத் திருப்பிக் கொடுக்க சம்பந்தப்பட்ட ஊழல்வாதிகளின் வழக்கறிஞர்கள் சட்டத் துறை அலுவலகத்துக்குப் (ஏஜிசி) படையெடுத்திருப்பதாக சரவாக் ரிப்போர்ட் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இது குறித்து கருத்துரைக்க சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் மறுத்துவிட்டார்.
ரிஸா அஸிஸின் கோரிக்கை மனுவை முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் பரிசீலித்ததாகவும், ஆனால் ஊழலில் திளைத்திருந்த அரசியல்வாதிகள் யாரும் அவரைச் சந்திக்கச் சென்றதில்லை என்றும் சொல்லப் படுகிறது.
அரசிடம் ரிஸா அஸிஸ் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, 1எம்டிபியிலிருந்து களவாடிய பணத்திலிருந்து வாங்கப்பட்ட 108 கோடி ரிங்கிட் சொத்துகளை அரசிடம் ஒப்படைப்பதாகக் கூறிய பின்னர், அவர் வழக்கிலிருந்து நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குழப்பமாக இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டதற்கு சட்டத்துறையமைச்சர் தக்கியுடின் ஹசான், மகாதீர் கபட நாடகம் ஆடுவதாகக் சாடினார்.
ரிஸாவின் விடுவிப்புக்குத் தாம் சம்மதம் தரவில்லை என்றும் பதவியில் அமர்த்திய பக்காத்தான் ஹராப்பான் அரசுக்குத் தாம் துரோகம் இழைக்க எண்ணம் கொண்டிருந்ததில்லை என்றும், ரிஸா திருப்பிக் கொடுக்க வந்த 108 கோடி ரிங்கிட்டை(248 மில்லியன் டாலர்) அமெரிக்க நீதித் துறை, அவரின் சொத்துகளைப் கைப்பற்றி, விற்ற பின்னர், அதனைத் திருப்பி அனுப்பும் நிலை இருந்ததாக அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
சட்டத்துறைத் தலைவர் தமக்கு எதிராக புனை கதையை ஜோடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நஜிப் ரசாக், ரோஸ்மா மன்சோரை அடுத்து அம்னோ தலைவர்களான அமாட் ஸாஹிட் ஹமிடி, புங் மொக்தார் ராடின், அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம், முகமட் இசா அப்துல் சமாட், தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஆகியோர் உட்பட பலரும் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 10 =