வர்த்த உரிமங்களை வாடகைக்கு விடும் முதலாளிகள் மீது நடவடிக்கை வேண்டும்

0

வர்த்தக உரிமங்களை வெளிநாட்டினருக்கு குத்தகைக்கு விடுவோரின் உரிமங்களை ஊராட்சி மன்றங்கள் மீட்டுக் கொள்ள வேண்டுமென கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ வலியுறுத்தினார். வர்த்தக உரிமங்களை வாடகைக்கு விட்டு கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் உள்ளூர்காரர்கள், அங்கு சோதனை நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு, சோதனை நடத்தப்படும்போது அங்கு தலைகாட்டுவதாகவும், அதன் பின்னர் அங்கு வெளி நாட்டினரே வர்த்தகத்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் ஊராட்சி மன்றங்கள் இந்த விவகாரத்தில் பாராமுகமாக இருப்பது கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இம்மாதிரியான நடவடிக்கையில் சட்டப்படியாக வந்திருக்கும், சட்டவிரோத அந்நியர்களும் ஈடுபட்டு பெரிய பிரச்சினையாக உருவாக்குவதால் அரசு அதனைத் தடுக்க தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டுமென சார்லஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + sixteen =