வரும் காலத்திலும் சிகாமட் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் கோட்டையே

சிகாமட் நாடாளுமன்றத் தொகுதி சார்ந்த மக்கள், தொற்று, மழை, வெள்ளம், வேலையிழப்பு போன்ற பல்வேறுப்பட்ட பொரு ளாதார சூழ்நிலையில் இருந்து மீட்டெடுக்கும் பணியில் கெ.அடிலான் இளைஞர் பிரிவுத் தலைவர் கருணன் கங்காதரன் மற்றும் மகளிர் பிரிவுத் தலைவி ஷாமளா வாசுதேவன் தங்கள் தொண்டர்கள் மூலம் முன்னெடுத்துள்ளனர். சிரமத்தில் உள்ளவர்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் தயாரித்து வைத்துள்ள பகல் உணவுகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். தொற்றினால் பலர் தங்கள் பாசத்துக்குரியவர்களை இழந்துள்ளனர். அவர்கள் இன்னும் அத்துயரத்திலிருந்து மீளாமல் இருக்கின்றனர். அக்குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் தேவையை அறிந்து சேவை செய்வதில் இளைஞர் பிரிவும், மகளிர் பிரிவும் பக்கபலமாக இருக்கின்றனர். சிகாமட் நாடாளுமன்ற வாக் காளர் பெருமக்கள், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் வற்றாத ஆதரவை வழங்கியுள்ளனர். அடுத்தக் காலத்திலும் மக்கள் கெ.அடிலான் வேட்பாளரையே விரும்பி ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. மஇகாவின் (பாரிசான்) கோட்டை யாக சிகாமட் விளங்கிவந்துள்ளது. அந்த கோட்டையைப் (பிகேஆர்,) பக்காத்தான் ஹராப்பானுக்கு மாற்றிய பெருமை மக்களையே சேரும் என ஷாமளாவும், வாசுதேவனும் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − two =