வருமானத்தின் 10 விழுக்காட்டை போக்குவரத்துக்குச் செலவழிக்கும் மலேசியர்கள்

0

மலேசியர்கள் போக்குவரத்திற்கு அதிகம் செலவழிக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. குறிப்பாக கோலாலம்பூரில் வாழ்கின்ற மக்கள் தங்கள் வருமானத்தின் 10 விழுக்காட்டை போக்குவரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

நோக்கியோ, ஹாங்காப் போன்ற நாடுகளில் இது 4 விழுக்காடாக இருக்கிறது. கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கவே ஆண்டுதோறும் உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 1.1 விழுக்காட்டில் இருந்து 2.2 விழுக்காடு வரை செலவுகள் ஏற்படுகின்றன.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு தனிநபருக்கு 6,144 வெள்ளியை செலவிடுவதற்கு இது சமம். இதைத் தீர்க்க போக்குவரத்து பெருந்திட்டம் வகுக்கப்படுகிறது. இன்னும் 11 ஆண்டுகளில் நிலம், கடல், விமானப் போக்குவரத்தில் இது பல மாற்றங்களைக் கொண்டுவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =