வருங்காலச் சுகாதாரச் சவால்களுக்கு மலேசியா தயார் நிலையில் உள்ளது

கோவிட் தொற்றில் கடந்த 2 ஆண்டு காலமாகப் போராடியதைத் தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக்கூடியச் சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க மலேசியா தயார் நிலையில் உள்ளது என்று சுகாதார அமைச்சின் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆதரவுப் பிரிவுக்கானத் துணைத் தலைமை இயக்குநர், டத்தோ டாக்டர் ஹிஷாம்ஷா முகமட் இப்ராஹிம் தெரிவித்தார். இக்கால கட்டத்தில் பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட நெருக்கடி நிர்வாகத் தணிப்பு, முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டப் போதிலும் இதற்கு முன் ஏற்படாத மாற்றங்கள் உட்பட நிறைய விவகாரங்களை மலேசியா கற்றுக் கொண்டது. இத்தொற்றிலிருந்து தனிநபர், அரசு சார்பற்ற இயக்கங்கள், சமூகம், நாடு அனைத்துத் தரப்பினருக்கும் சரியானப் பாடம் கற்பிக்கப்பட்டு விட்டது என்பதை மறுக்க முடியாது. இதில் அமைச்சைப் பொறுத்தவரை இத்தொற்று மாறுபட்டப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் வரும் காலங்களில் ஏற்படக்கூடிய இம்மாதிரியானத் தொற்றுநோய்களுக்கு மாறுபட்ட அணுகுமுறைகளைக் கையாளச் சுகாதாரப் பணியாளர்கள், நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் மறுஆய்வுச் செய்ய வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் ‘கோவிட்டுக்கு எதிராகப் போராடுவதில் கிடைத்த பாடம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய போது டாக்டர் ஹிஷாம்ஷா முகமட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 12 =