வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும்

0

வனவிலங்குகள், பல்லுயிர்கள் மற்றும் காட்டு வளங்களைப் பாதுகாக்க தற்போதைய சட்டங்கள் திருத்தப்படும் என நிலம், நீர் மற்றும் இயற்கை வளத் துறையமைச்சர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

பல்லுயிர் மையத்தை அமைக்க பல ஆண்டுகளாகப் பேசப்பட்ட தாகவும், தற்போது அதற்கான ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதால் அது விரைவில் நிர்மாணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் ஏராளமான இயற்கை சார்ந்த உயிரினங்கள் இருப்பதால், அந்த மையம் பந்திங் பாயா இண்டா சதுப்பு நிலக் காட்டில் நிர்மாணிக்கப்படும்.

அதனை நிர்மாணித்துப் பராமரிக்க தனியார் துறைகளோடு சமூக அமைப்புகளின் உதவியும் நாடப்படும். நாட்டில் தற்போது லங்காவியில் யுனெஸ்கோ உலகளாவிய பல்லுயிர் பூங்காவும் கிந்தா வேலி பல்லுயிர் பூங்காவும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஜொகூர், பகாங், கெடா, பெர்லிஸ் மற்றும் லாபுவானில் அம்மாதிரியான பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதனிடையே 2010ஆம் ஆண்டு வனவிலங்கு பாரமரிப்புச் சட்டம் மற்றும் 1984ஆம் ஆண்டு தேசிய வனச் சட்டம் ஆகியவற்றின் திருத்தங்கள் வரும் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் தாக்கல் செய்யப்படும். மிருகங்கள் மற்றும் மிருகங் களின் பாகங்களை விற்கும் வகையில் ஆன்லைன் விற்பனை யைத் தடுக்க, குற்றங்களுக்கான அபராதத் தொகை 100 விழுக்காடு அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தமது அமைச்சு மேற்கொண்ட ஓப்ஸ் பெலாங் மற்றும் ஓப்ஸ் பெர்செபாடு கஸானா ஆகிய சோதனை நடவடிக்கைகளின் மூலம் காட்டு மிருகங்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு, 82 வனவிலங்கு வேட்டையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசியான் நாடுகளுக் கிடையிலான பல்லுயிர் பாதுகாப்பு மாநாடு மார்ச் 16 இல் இருந்து 20ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என்றும் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here