வட மாநில இந்திய சிகையலங்கார இயக்க ஏற்பாட்டில் ரத்ததான முகாம்

வட மாநில இந்தியர் சிகையலங்கார சமூகநல இயக்கத்தின் ஏற்பாட்டில் நடந்த இரத்ததான முகாமில் 45 நபர்கள் இரத்தம் வழங்கினர். அதே வேளையில் பொருளாதார உதவி நாடிய குடும்ப மாதுவான திருமதி வசந்திக்கு வட மாநில இந்தியர் சிகையலங்கார சமுகநல இயக்கத்தின் தலைவர் ச.புவனேஸ்வரன் சங்க சார்பாக வசந்திக்கு 1,200 வெள்ளி நிதி வழங்கினார். வட மாநில இந்தியர் சிகையலங்கார சமுகநல இயக்கத்தின் கட்டத்தில் நடந்த இரத்ததான முகாமில் 45 க்கும் மேற்பட்டவர்கள் அரசாங்க மருத்துவமனைக்கு இரத்தம் வழங்கினர். கப்பளா பத்தாஸ் மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர்கள் ரத்ததான முகாமில் முழுமையாக பணியாற்றி இரத்தம் சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, காலை 10 மணி அளவில் தொடங்கிய இரத்ததான முகாம் மாலை 4 வரையில் தொடர்ந்தது. குடும்ப மாதுவுக்கு உதவி உட்பட முதன்மைப் பணியாளர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அதே வேளையில் கோவிட்-19 காரணமாக பொது மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் சமூகநல ஏற்பாட்டில் முகக்கவசம், கையுறை, பெம்பர்ஸ், கைகழுவும் சோப் மேலும் பல அத்தியாவசியப் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் வழங்கப்பட்டன. தாசேக் குளுகோர் காவல் துறை தலைவர் உட்பட அரசாங்க அதிகாரிகள் இரத்தான முகாமை பார்வையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.வட மாநில இந்தியர் சிகையலங்கார சமுகநல இயக்கத்தின் தலைவர் ச. புவனேஸ்வரன் தலைமையில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் நாட்டில் உள்ள நம் சமூக அமைப்புகள் பல்வேறு சேவைகளை செய்வதுடன் இரத்தான முகாம் ஏற்படுத்தி அரசாங்க மருத்துவமனைகளில் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − nine =