வசதி குறைந்த இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி எச்ஆர்எஃப் நிதியம் உதவி

0

‘2020ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மனிதவள நிதியத்தின் 3 கோடி ரிங்கிட், வசதி குறைந்த குடும்ப மாணவர்களின் தொழில் திறன் பயிற்சி வழங்கப் பயன்படுத்தப்படும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், திறன் பயிற்சியைப் பெற திறன் மேம்பாட்டு நிதிய கார்ப்பரேஷனில் இருந்து ஒவ்வோர் இளைஞருக்கும் தலா 3,000 ரிங்கிட் வழங்கப்பட்டது. அதனை மாதமொன்றுக்கு 100 ரிங்கிட் வீதம் திருப்பி வழங்க விதிமுறை இருக்கிறது. எனினும், அவர்களின் சம்பளம் 1,500 ரிங்கிட்டாக இருந்து திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை 10 விழுக்காடாக இருப்பதால், கடனை திரும்பப் பெறுவது இயலாத காரியமாகும்.
எனவே, திறன் பயிற்சி யைத் தொடர புதிய வழியைக் காண வேண்டியிருப்பதால், எச்ஆர்டி எஃப் நிதியத்தின் 3 கோடி ரிங்கிட்டைப் அதற்காகப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதன் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் திறன் பயிற்சிகளில் இளைஞர்கள் தொடர்ந்து பலனடைய முடியும் என குலசேகரன் தெரிவித்தார்.
மேலும், எச்ஆர்டிஎஃப் நிதிக்கு நிறுவனங்களின் சந்தா கட்டணம் வழங்கும் 63 தொழில் பிரிவுகளை 82ஆக அதிகரிப்பதன் மூலம், அதன் வருமானத்தை 2.43 மில்லியனிலிருந்து 2.7 மில்லியனாக அதிகரித்து, அதன் மூலம் திறன் பயிற்சியைத் தொடர முடியும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 5 =