வங்கி கடன் நீடிக்கப்பட்டதால் 95 சிறு நிறுவனங்கள் பயனடைந்துள்ளன

0

2020ஆம் ஆண்டு ஜுலை 20ஆம் தேதி வரையில், 77 லட்சம் தனிநபர் கடன் பெற்றவர்கள் அல்லது கடன் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் 93 விழுக்காட்டினர், கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், 3,830 கோடி ரிங்கிட் மதிப்பிலான
பயனை அடைந்திருப்பதாக பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
அதோடு, அதே காலக்கட்டத்தில் 2 லட்சத்து 43-ஆயிரம் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையில் ஈடுபடுபவர்கள், அதாவது அக்குழுவைச் சார்ந்த 95 விழுக்காட்டினர், 2,070 கோடி ரிங்கிட் மதிப்பிலான பயனை அடைந்திருப்பது, பேங்க் நெகாராவின் புள்ளிவிவரம் காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
பொருளாதார நடவடிக்கைகள் கடந்த மே மாதம் முதல், கட்டம் கட்டமாக திறக்கப்பட்டது முதல், தற்போது அமலில் இருக்கும் மீட்புநிலை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவான ஞமுஞஞ காலக்கட்டத்திலும், நாடு தழுவிய நிலையில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக டான் ??ரீ முகிடின் குறிப்பிட்டார்.
இருந்தப்போதிலும், இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளாத சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையில்
ஈடுபட்டிருக்கும் கடன் பெற்றவர்கள், 5,000-தில் இருந்து 13 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =