வங்கிக் கடனைச் செலுத்தாதவர்கள் மீது திவால் வழக்கு வேண்டாம்

வங்கிகளுக்கான கடனைச் செலுத்தாதவர்கள் மீது தொடுக்கப் படும் திவால் வழக்குகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) கேட்டுக் கொண்டுள்ளது.
வேலையிழந்து, வருமானம் இழந்தோரின் வீடு, வாகன கடன்களைச் செலுத்தும் கால அவகாசம் செப்டம்பர் மாதம் முடிவடையவிருக்கிறது.
கடனைச் செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் திவால் வழக்கைத் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதால், அதனை அரசு தடை செய்ய வேண்டுமென்று எம்டியுசியின் தலைவர் அப்துல் ஹலிம் மன்சோர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் கருத்தில் கொண்டு
அரசு அவசர உத்தரவைப் பிறப் பித்து உதவ வேண்டுமென்றும் தொழிலாளர்களில் 5.5 விழுக்காட்டினர் வேலையிழந்துள்ள நிலையில் அரசு இதில் முக்கிய கவனத்தைச் செலுத்த வேண்டுமென்றும் அப்துல் ஹலிம் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 3 =