வங்கிகள் 106 கோடி ரிங்கிட் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன

0

நாட்டில் ஆறு மாதகாலத்திற்கு வங்கி கடன்களைத் திருப்பி செலுத்துவதற்கான ஒத்திவைப்பு தொடர்பில், வங்கிகள் அனைத்தும் 7,400 கோடி ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடனை திருப்பி செலுத்துவதற்கான நடைமுறை மாற்றத்தின் காரணமாக வங்கிகள் இந்த இழப்பை எதிர்நோக்குவதாக நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார்.
கோவிட்-19 தாக்கத்தின் போது மக்கள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்லும் வகையில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
“ஆறு மாத காலத்திற்கு வங்கி கடன் ஒத்திவைப்பினால், மொத்த இழப்பு 640 கோடி ரிங்கிட் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இச்சூழ்நிலை பொது மக்களுக்கு மேலும் கடன்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படும்” என்று அவர் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடரப்பட்டால் மக்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, அரசாங்கம் எப்போதும் அண்மைய நிலைவரங்களை கண்காணித்து வருவதோடு, தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வங்கி கடன் ஒத்திவைப்பு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமா என்ற முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
மலேசிய நிதி அறிக்கை தரநிலையின்படி, ஒவ்வொரு மாதமும் வங்கி கடன்களைத் திருப்பி செலுத்துவதற்கான ஒத்திவைப்பு நீட்டிக்கப்பட்டால், நாட்டின் வங்கி முறை 106 கோடி ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கக்கூடும் என்று கணிக்கப்படுவதாக தெங்கு சஃப்ருல் கூறினார்.
ஆறு மாதங்களுக்கு வங்கி கடன் ஒத்திவைப்பை அறிமுகப்படுத்திய முதல் நாடு மலேசியாவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதோடு, இந்த நடவடிக்கையைச் செயல்படுத்திய நாடுகளில் சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இங்கிலாந்து, கனடா, இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − seven =