வங்காளதேசத் தொழிலாளர்களை மறுபடியும் வேலைக்கு அமர்த்தும் முறை தரப்படுத்தப்படும்

0

வங்காளதேசத் தொழிலாளர் களை வேலைக்குச் சேர்த்தல், திருப்பி அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளை தரப்படுத் துவதன் முக்கியத் துவத்தை மலேசியாவும் வங்காளதேசமும் வலியுறுத்தின.


மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், வங்காளதேச குடிபெயர்ந்தவர்களின் நலன்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இம்ரான் அமாட் ஆகியோர் புதன்கிழமையன்று இங்கு சந்தித்துப் பேசிய பிறகு வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறினார்.


இதன் வழி பாதுகாப்பான, வெளிப்படையான, முறையான வங்காளதேசத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் பணியை உறுதி செய்ய முடியும் என்று அவ்வறிக்கை கூறியது.
வங்காளதேசத் தொழிலாளர் களை மறுபடியும் வேலைக்குச் சேர்ப்பது தொடர்பாக நிலுவையில் உள்ள எல்லா அம்சங்களையும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.


வங்காளதேசத் தொழிலாளர் களை வேலைக்குச் சேர்ப்பது தொடர்பான முறைகேடுகள், துஷ்பிரயோகம் மற்றும் ஒழுக்கமற்ற முறையில் வேலைக்கு ஆள் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் இருநாட்டு அமைச்சர்கள் வலியுறுத்தினர் என்று அவ்வறிக்கை கூறியது.
வேலைக்கு ஆள்சேர்ப்பது தொடர்பாக ஏற்படும் செலவினங் களைக் குறைப்பதற்கும் இரு நாடு களும் தங்கள் நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று இரு தரப்பினரும் கூறினர்.


அவ்வறிக்கை மேலும் கூறுகையில், இரு நாடுகளில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பொருட்டு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
அத்தகைய நிறுவனங்களுக் கிடையே ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும். ஏற்படும் செலவினங்களைக் குறைப்பதற்கும் இருநாட்டில் உள்ள ஆள் சேர்ப்பு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


இருநாட்டு ஆள் சேர்ப்பு நிறுவனங்களும் திறமையானவையாகவும் நம்பகத் தன்மையுடனும் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது.
மலேசியாவில் பணிபுரியும் வங்காளதேசத் தொழிலாளர் களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு சமூக சேமிப்புத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
வங்காளதேசத் தொழிலாளர் களின் சுகாதார பரிசோதனை மற்றும் அதனால் ஏற்படும் செலவினங்கள் பற்றி அந்நாட்டு அரசாங்கம் கூறிவரும் ஆலோசனைகளை மலேசிய மனிதவள அமைச்சும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் பரிசீலிக்கும் என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =