வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து 23 பேர் பலி

வங்காளதேசத்தில் படகுடன் மோதி மற்றொரு படகு, ஆற்றில் மூழ்கியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் உள்ள புரிகங்கா நதியில், ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒன்று, மற்றொரு படகுடன் மோதி கவிழ்ந்தது. தகவலறிந்த மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதில் 23 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்புப் பணி நடக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. கடலில் மூழ்கிய படகில் 50 பேர் இருந்ததாக உயிர் பிழைத்த ஒருவர் கூறினார். ஆனால் டிவியில் 71 பேர் இருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. 100 பேர் வரை, அந்த படகில் பயணம் செய்ய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 3 =