வகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி

0

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் வக்கீல் அப்துல் அஜிஸ்.

இவரது மனைவி சாஜனா. இவரும் வக்கீலாக உள்ளார். இவர்களின் மகள் ‌ஷகாலா (வயது 10). இவர் சுல்தான் பத்தேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை 3.30 மணிக்கு மாணவி ‌ஷகாலா பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.

பள்ளி வகுப்பறையில் உள்ள ஒரு சிறிய துவாரத்தில் இருந்த பாம்பு ‌ஷகாலாவை கடித்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி பள்ளி ஆசிரியர்கள், ‌ஷகாலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மகளை மீட்டு அருகில் உள்ள சுல்தான் பத்தேரி தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பாம்பு கடித்து தான் மாணவி மயங்கினாரா? என்பதை டாக்டர்களால் உறுதி செய்ய முடியவில்லை. இதையடுத்து கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். வழியில் மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் வழியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ‌ஷகாலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

‌ஷகாலாவின் இறப்புக்கு டாக்டர்களின் கவனக்குறைவே காரணம் என்று அவரது பெற்றோரும், உறவினரும் குற்றம் சாட்டினர்.

பாம்பு கடித்ததும், டாக்டர்கள் உடனே கண்டுபிடித்து இருந்தால், அதற்கு சிகிச்சை அளித்து மாணவியை காப்பாற்றி இருக்கலாம், ஆனால் சிகிச்சை தாமதம் ஆனதாலேயே ‌ஷகாலா இறந்து விட்டதாக அவர்கள் புகார் கூறினர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =