லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் ஏற்பாட்டில் ‘வலிமை’ சிறப்புக் காட்சி

அண்மையில் பெட்டாலிங் ஜெயா எம்பிஓ திரையரங்கில் லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் ஏற்பாட்டில் தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது.
இதற்கு டத்தோ ரெனா ராமலிங்கம் சிறப்பு வருகை யளித்தார். லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் தலைமை நிர்வாகி மூர்த்தி லோட்டஸ் குழுமத்தின் இளம் தொழிலதிபர் கார்த்திக், டான்ஸ்ரீ ராமசாமி, தீபா மெட்டல் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஆறுமுகம், உள்நாட்டுக் கலைஞர் களான லோக்கப் நாதன், காண்டீபன், ஆனந்தா, கவிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வலிமை திரைப்படம் திரை யிடப்பட்ட அனைத்துத் திரை யரங்குகளும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தன.
இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக சிறப்பான முறையில் நடித்துள்ளார். மோட்டார் சைக் கிள் சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் அதிகமான பொருள் செலவில் தயாரித்துள்ளார்.
ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை சலிக்காமல் பார்த்து ரசிக்கக் கூடியவாறு இயக்குநர் விநோத் இயக்கியுள்ளார்.
தீம் இசையினால் ரசிகர் களை மகிழ்வித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. ஆக மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக ‘வலிமை’ திரைப்படம் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =