லீ சீ ஜியாவுடன் பேச்சு நடத்துவேன் -அகமட் பைசால் அசுமு

மலேசிய பேட்மிண்டன் சங்கம் மற்றும் தேதிய பேட்மிண்டன் விளையாட்டாளர் லீ சீ ஜியாவுடன் தாம் பேச்சு நடத்தவிருப்தாக இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். அவ்விரு தரப்புக்குமிடையே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சியாக அவர்களுடனான தமது சந்திப்பு இருக்கும் என அவர் கூறினார். மலேசிய பேட்மிண்டன் சங்கம் மற்றும லீ சீ ஜியா வுக்கிடையே தற்போது ஏற்பட்டுவரும் நெருக்கடியை மலேசியர்கள் குறிப்பாக பேட்மிண்டன் ரசிகர்கள் விரும்பவில்லை என அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்கினால் பிரச்சனைக்கு எப்போதும் தீர்வு இருக்கும் என்றும் அவர் விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =