லாபுவானில் கடுமையான கோவிட் – 19 சோதனை

File pic

சபா பெருநிலத்தில் கோவிட் – 19 தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து சபாவிலுள்ள சில பகுதிகளில் இருந்து வருபவர்கள் மீது கடுமையான சுகாதார பாதுகாப்பு மேற்கொள்ளப்படும் என்று லாபுவான் சுகாதார இலாகாவின் இயக்குநர் டாக்டர் இஸ்முனி பொஹாரி கூறினார்.
சம்பந்தப்பட்டவர்களின் பயண வரலாற்றை பொறுத்து லாபுவானில் இருந்து 3 நாட்களுக்கு மேல் வெளியில் தங்கி இருந்தவர்கள் மீது கோவிட் – 19க்கான சோதனை லாபுவான் விமான நிலையத்திலும் படகுத் துறை முகங்களிலும் மேற்கொள்ளப்படும்.
லஹாட் டத்துவிலும் தாவாவிலும் 3 நாட்களுக்கு இருந்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கோவிட் – 19க்கான சோதனை மேற்கொள்ளப்படும் பயண வரலாறு உள்ளவர்களுக்கான வழக்கமான பணி நெறிமுறை இதுவாகும். சபா மாநில தேர்தலை முன்னிட்டு லாபுவானிற்கும் சபா பெருநிலத்திற்கும் இடையிலான பயணங்கள் அதிகரித்து உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + thirteen =