லவ் ஸ்கேம் மோசடி: ஆறு நைஜீரியர்கள் மீது குற்றச்சாட்டு!

0

நேற்று முன்தினம் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் லவ் ஸ்கேம் மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக நம்பப்பட்ட ஆறு நைஜீரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மடுக்காசி ஜேம்ஸ் ஜேம்ஸ், மடுக்காசி டேனியல் ஜேம்ஸ், மடுக்காசி ஜொனாதன் ஜோன், மோய்யா ஐஜிக்கா எஸ். கென்னடி, ஓகோங்கு டச்ஹுகு ஜோன் ஆகியோர் கைவிலங்கிட்டு கொண்டு வரப்பட்டனர்.
25 வயது முதல் 30 வயதுடைய 13 பேரை லவ் ஸ்கேம் மோசடியில் ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 2014 முதல் ஜூன் 2019 ஆண்டு வரை அம்மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். விஸ்தா லாவேண்டார் பூச்சோங் சிலாங்கூர் அடுக்கக வீட்டில் லவ் ஸ்கேம் மோசடியை புரிந்துள்ளனர். தாதி ஒருவர் 696,500 வெள்ளியை கொடுத்து ஏமார்ந்துள்ளார். மாணவர்கள், இல்லத்தரசிகள், கூலித் தொழிலாளர்கள் இவர்கள் மோசடியில் சிக்கியுள்ளனர்.
கடப்பிதழ் இன்றி மலேசியாவில் இருந்து வரும் இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 24 ஆம் தேதி இவர்களின் வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 9 =