லத்தீபா எம்ஏசிசி பதவியிலிருந்து விலகியதை உறுதிப்படுத்தினார்

ஊழல் தடுப்பு ஆணைய தலைமை ஆணையராக இருந்த லத்தீபா கோயா தமது பதவியை விட்டு விலகியதை உறுதிப்படுத்தினார். தாம் யாருடைய நெருக்குதலுக்கும் பணிந்து பதவி விலகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மார்ச் 2ஆம் தேதி, திங்கள்கிழமை தாம் பதவி விலகும் கடிதத்தை பிரதமர் முஹிடினிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அது பேரரசரின் ஒப்புதலுக்குப் பின்னர் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தலைமை ஆணையர் பதவி யிலிருந்து விலகியது தமது சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அதில் யாரின் தலையீடும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆட்சி கைமாறிய பின்னர், துன் மகாதீரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விலகுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் சட்டத்துறைத் தலைவராக இருந்த டோமி தோமஸ் தமது பதவியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.
எம்ஏசிசியின் நடவடிக்கைகளைப் பற்றி தாம் முஹிடினிடம் விளக்கியதாகவும் அவரும் அதனை வரவேற்றிருப்பதாக லத்தீபா குறிப்பிட்டார்.
தாம் இல்லாவிட்டாலும் எம்ஏசிசியின் நடவடிக்கைகள் எந்தத் தடையுமின்றி தொடரும் என்றும் அந்த சுதந்திரமான அமைப்பு யாருக்கும் பாகுபாடு காட்டாமல் ஊழலை ஒழிக்கப் பாடுபடும் என்றும் லத்தீபா நம்பிக்கை தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =