லண்டனில் கேண்டர்பரி பேராயரை சந்தித்தார் பேரரசர் சுல்தான் அப்துல்லா

லண்டனுக்கு வருகை தந்திருக்கும் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷா மரியாதை நிமித்தம் கேண்டர்பரி பேராயரை சென்று கண்டார்.
லாம்பெத் மாளிகையில் கேண்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பியை பேரரசர் அரை மணி நேரம் சந்தித்து, இருநாடுகளின் பல்லின கலாசாரம் மற்றும் பல்லின சமய விவகாரங்கள் பற்றிப் பேசினார்.
அதன் பின்னர், சுல்தான் அப்துல்லா, லாம்பெத் மாளிகையைச் சுற்றிப் பார்த்ததோடு அங்கிருக்கும் மிகப் பெரிய நூலகத்தையும் சென்று கண்டார். பேராயரின் தனிப்பட்ட இராணுவத் தளவாடக் கிடங்கும் அவருக்குச் சுற்றிக் காண்பிக்கப்பட்டது.
சுல்தான் அப்துல்லாவும் பேரரசியார் துங்கு அஸிஸா அமீனா மைமுனாவும் சிறப்பு வருகை மேற்கொண்டு லண்டன் சென்று டிசம்பர் 16ஆம் தேதி வரை அங்கிருப்பர்.
நேற்று அவர்களுக்கு இங்கிலாந்து அரசியார் தமது பங்கிங்ஹாம் மாளிகையில் விருந்தளித்து சிறப்புச் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =