லஞ்சம் நமது சந்ததியினரைப் பாதிக்கும்

மக்கள் வாழ்வின் உன்னத மதிப்புக் கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊழல், லஞ்ச நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
லஞ்சம் வாங்குவது அப் போதைக்கு லாபமாக இருந்தாலும் அதனால் நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவர் என்பதை மறக்கக் கூடாதென்று அவர் நினைவுறுத்தினார்.
தாமான் ரும்புன் பஹாகியா ஜசெக தொகுதியின் ஏற்பாட்டில், இணையதளத்தின் மூலம் நடத்தப்பட்ட பேட்டியில் பேசிய மகாதீர், மக்கள் வாழ்க்கையின் மதிப்புக் கூறுகளை பின்பற்றத் தவறினால், நாடு முன்னேற முடியாது என்று அவர் எச்சரித்தார்.
சபாவில் ஆட்சி கவிழ்க்கும் முயற்சி தோல்வியடைந்தது பற்றி குறிப்பிட்ட அவர், மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுவது அவர்களின் உரிமை என்றாலும், சுயநலத்தோடும் சுய லாபத்துக்காகவும் அதனைச் செய்வது தவறாகும்.
தான் கொண்ட கொள்கைகளில் இருந்து கட்சி தவறிச் சென்றால், அதனை விரும்பாத மக்கள் பிரதிநிதிகள் வேறு கட்சிக்குத் தாவுவதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டார்,
சபாவில் வாரிசான் கட்சி திசை மாறிச் செல்லவில்லை. மாறாக, மக்கள் பிரதிநிதிகளே பணத்துக்காகவும் பட்டம் பதவிக்காகவுமே கட்சி தாவி, சிக்கலை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அது ஜனநாயகத்துக்குக் கெடுதல் என்றும் மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதியை மீறிய செயலாகும் என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =